சென்னையில் இந்தாண்டு (2024) விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டாக அமைந்ததாக சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மக்களின் கொண்டாட்டங்களுக்கு இடையே 2024 புத்தாண்டு நேற்று கோலாகலமாகப் பிறந்தது . நள்ளிரவில் சாலைகளில் குவிந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதுமட்டுமின்றி கோயில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளாமான மக்கள் கலந்துகொண்டு அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாடினர்.

இதையடுத்து சென்னையில் இந்தாண்டு விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டாக அமைந்ததாக சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு, சென்னை மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து X தள பக்கத்தில் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை பதிவிட்டுள்ளது.