“சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல” என்றும், அவர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார்.
தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடை கோரி பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி காட்டம்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது..
“சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது….
தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல…..
அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள்…..
மன கஷ்டங்களை போக்க வரும் பக்தர்களை அவமானப் படுத்துகின்றனர்……
காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும். இல்லையெனில் விபூதி கூட கிடைக்காது……
கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருகிறார்கள் என்பது போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர்…..
பக்தர்கள் வரும் வரைதான் அது கோயில்; இல்லாவிட்டால் கோயில் பாழாகி விடும்” எனக் கூறியுள்ளார்.