தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் புதிதாக 20 நடமாடும் தேநீர் கடைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடமாடும் தேநீர் கடைகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பபீட்டில் புதிதாக 20 நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தேனீர் கடைகள் தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 கடைகளில் சென்னையில் 10 கடைகளும் , திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3 கடைகளும், கோவையில் 4 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
கலப்படமற்ற தரமான தேயிலையில் 10 ரூபாய் விலையில் விநியோகிக்க, தமிழக அரசு தோடங்கி வைத்துள்ள இந்த நடமாடும் தேநீர் கடைகள், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.