காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு இன்று உணவு பரிமாறி காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார் .
திட்டத்தை தொடங்கி வைத்த பின் உணவின் தரத்தை பரிசோதித்த முதலமைச்சர், பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 18.50 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில், தற்போது கூடுதலாக 2.20 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர் .
இதேபோல் வேலூரில் ஊரகப் பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1-5 வகுப்பு பயிலும் 81 மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
முதகமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது
குன்றக்குடியில் உள்ள தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார்.