சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்து பத்திரமாக ( Mother commits suicide ) மீட்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையின் தாய் நேற்று முன்தினம் காரமடையில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் . இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.
ரம்யாவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் காரமடை ஆகும். வெங்கடேசும், ரம்யாவும் ஐ.டி. நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துள்ளனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் அவர்கள் வசிக்கும், அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து பால்கனி கூரையில் 7 மாத பெண் குழந்தை திடீரென தவறி விழுந்தது. குழந்தை அங்கிருந்து நழுவி கீழே விழுந்து விடும் நிலையில் இருந்தபோது, அக்கம், பக்கத்தினர் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
Also Read : ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு..!!
குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னையில் இருந்த ரம்யா தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் காரமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தனர் .
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து ரம்யா கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் குழந்தை என ஆனந்தமாக வாழ்ந்து வந்த நிலையில் தீடிரென ரம்யா தூக்கிட்டு தற்கொலை ( Mother commits suicide ) செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை மீள துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .