சீனாவில் வசிக்கும் மக்கள் திருமணம் செய்துகொள்வதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய நாடு என்ற பெருமையை பெற்றுள்ள சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.
இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய தயங்குவது போன்றவற்றால் இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : இலங்கை சுழலில் சிக்கி தவிக்கும் இந்தியா..!!
சீனாவில் திருமணம் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சீனர்கள் திருமணம் செய்து கொள்ள மிகவும் அஞ்சுவதாகவும் அந்நாட்டில் உள்ள கட்டுப்பாடுகள் இதற்கு முக்கிய பங்காற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இன்றிய நவீன காலத்தில் லிவிங் கலாச்சாரம் அதிகமாக இருந்து வருவதாலும் இந்த கலாச்சாரம் இன்றைய கால இளசுகளுக்கு பிடித்துள்ளதாலும் திருமண பந்தம் குறித்த புரிதல் இல்லாததாலும் அத மகத்துவத்தை அறிந்துகொள்ளலாமலே திருமணத்தை தவிர்ப்பது வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.