கில்லி படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனா நிலையில், இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கலந்த காதல் கதையாக வெளியான திரைப்படம் தான் ‘‘கில்லி’’ .
காதல் நாயகனாக வலம் வந்த விஜயை ஆக்ஷன் நாயகனாக களமிறக்கிய திரைப்படம் கில்லி.மதுரையில், தாதாவாக முத்துபாண்டி கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் சொல்லும் வசனங்கள்”செல்லம்” இன்றளவும் கைதட்டல் பட்டையை கிளப்பும்.
மேலும் விஜய்யின் அதிரடி, த்ரிஷாவின் இன்னொசென்ஸ், வில்லனாக பட்டையை கிளப்பிய பிரகாஷ் ராஜின் வில்லத்தனம் என படம் முழுக்க ரசிகர்களை அதே துடிப்போடு வைத்திருந்தது படம்.
குறிப்பாக வித்யாசாகரின் துள்ளலான இசையில் உருவான படத்தின் அத்தனை பாடல்களுமே மக்களை ஆடவைத்த பாடல்கள், அப்படி போடு போடு பாடலுக்கு இன்றும் ஆடாமல் இருக்கமுடியாது.
படத்தில் சில காட்சிகளில் இந்த வீடும் அதன் பின்னல் இருக்கும் லைட் ஹவுஸ் காட்சிகளும் காட்டப்பட்டிருக்கும். சமீபத்தில் படத்தின் இயக்குனர் தரணி இந்த லொக்கேஷன் குறித்த உண்மையை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கில்லி படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் அதில் வரும் வீடு மற்றும் லைட் ஹவுஸை காண சென்னை வந்து பல இடங்களிலும் அந்த லொக்கேஷனை தேடி சென்றார்களாம்,ஆனால் ஒருவர் கண்ணிலும் அந்த வீடு மற்றும் லைட் ஹவுஸ் சிக்கவே இல்லையாம்.
ஏனென்றால் அந்த வீடு, லைட் ஹவுஸ் அது முழுக்க 7 ஏக்கர் பரப்பளவு போடப்பட்ட மிகப்பெரிய செட் என்ற உண்மையை கூறியுள்ளார் இயக்குனர் தரணி.
இவ்வளவு நாளும் படத்தை பார்த்தவர்கள், அது உண்மையான வீடு என்றும் வீட்டின் பின்னல் இருக்கும் லைட் ஹவுசும் உண்மையான இடம் என்றும் நினைத்தியிருந்தனர்.‘அது உண்மையான இடம் இல்லை அது செட்’ என்று இயக்குனர் தரணி கூறியிருப்பது பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.