இசைஞானி இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்னுடைய மகன் பாவலர் சிவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
திரைத்துறையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் இசைத்துறையில் சாதனை புரிந்து வரும் நிலையில் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவராக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திகழ்ந்தார். இவர் கடந்த 1973-ம் ஆண்டே மரணம் அடைந்தார். இவருக்கு பாவலர் சிவன் என்கிற மகனும் உள்ளார்.
புதுச்சேரியில் வசித்து வந்த பாவலர் சிவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் இளையராஜாவின் இசைக்குழுவின் சில ஆண்டுகள் பயணித்து வந்தார்.மேலும் ஒரு சில படங்களுக்கு சிவன் இசையமைத்து உள்ளார்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாவலர் சிவன் திடீரென நேற்று காலமானார்.
மேலும் இவரது மறைவு இளையராஜாவின் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு திறையுரையில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.