பிரபல ஊடகத்தில் வேலை செய்யும் செழியன் எனும் பத்திரிகையாளர் கொலை செய்யப்படுவதுடன் படம் துவங்குகிறது. தனக்கு பிடித்த நடிகர் பற்றி நெகட்டிவாக செய்தி வெளியிட்டதற்காக செழியனை கொன்றுவிடுகிறார் ரசிகர் ஒருவர்.
ஆனால் அந்த கொலையாளி அவராக செயல்பட்டாரா இல்லை யாரோ ஒருவரின் சுயலாபத்திற்காக பலிகடா ஆகிவிட்டாரா?. இந்த கேள்வி தான் ரஞ்சித் குமார்(விஜய் ஆண்டனி)(vijay antony) என்ட்ரி கொடுத்த பிறகு எழுகிறது.
அதிகம் விற்பனையாகும் டிவிகளில் 65% வரை தள்ளுபடி- பெரிய திரைகள் அதிக சேமிப்புபிரபல புலனாய்வு பத்திரிகையாளரான ரஞ்சித் வாழ்வில் ஒரு பெரும் சோகம் நடக்கிறது. அதன் பிறகு வேலையை விட்டுவிட்டு கொல்கத்தாவில் தங்கி தன் மகளை பார்த்துக் கொள்கிறார்.
கொலை செய்யப்பட்ட செழியன் ரஞ்சித்தின் நெருங்கிய நண்பர். மேலும் தனக்கு தந்தை போன்றவரான ரத்தினம் பாண்டியனின்(நிழல்கள் ரவி) மகன். அதனால் தன் வேலைக்கு திரும்பி வந்து செழியனின் கொலை குறித்து துப்பறிகிறார்.
அப்பொழுது தான் செழியனின் கொலைக்கு பின்னால் ஒரு சிலரும், ஒரு பெரிய நெட்வொர்க்கும் இருப்பதை கண்டுபிடிக்கிறார் ரஞ்சித். மேலும் பல கொலைகள் நடக்கும் முன்பு அதற்கு எல்லாம் முக்கிய மூளையாக இருப்பவரை கண்டுபிடிப்பாரா ரஞ்சித்?
அந்த கொலைகள் குறித்து கண்டிபிடிக்க ஹீரோ மிகவும் அறிவாளியாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் நிஜமான வில்லனை யாரும் குற்றவாளி என சொல்ல முடியாதபடி இருக்கிறார். கொலைகள் மூலம் கிடைக்கும் சந்தோஷத்திற்காக அதை செய்கிறார்.
இந்த அற்புதமான ஐடியாக்களை திரையில் காட்டும்போது தாக்கம் அதிகம் இல்லை. கதையின் ஓட்டம் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது.
படத்தில் வரும் சில காட்கள் தான் தியேட்டரில் இருப்பவர்களை கவர்கிறது. விஜய் ஆண்டனி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ரத்தம் என்கிற தலைப்பை பார்த்து பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்றால் அப்படி பெரிதாக எதுவும் இல்லை