தமிழ்சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி(Vijay Antony). அவர் நடித்துள்ள ரோமியோ பட புரமோஷன் குறித்த செய்தியாளர்கள் நேர்காணலின்போது, ஜீசஸ் கூட திராட்சை ரசம் என்ற பெயரில் மது குடித்திருக்கிறார் என்று கூறியதாக சர்ச்சையானது.
இது குறித்து விஜய் ஆண்டனிக்கு எதிராக தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொது வெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி(vijay antony) பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதையும் படிங்க: ”இயேசு குறித்து தவறான கருத்து..”விஜய் ஆண்டனிக்கு கிறிஸ்தவ சபை கடும் கண்டனம்!
இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கனவிலும் கூட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க தனக்கு வராது என்று கூறி விஜய் ஆண்டனி (Vijay Antony) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே வணக்கம்!
நான் முன்தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான். தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது. இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தேன்.
ஒரு பத்திரிகை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தப்படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.
இவ்வாறு தனது அறிக்கையில் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.