ஷாருக்கானின் ஜவான் ட்ரைலர் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் ட்ரைலரை டீகோட் செய்து வருகின்றனர்.
அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். மேலும், அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் முதல் முறையாக என்ட்ரி கொடுக்கிறார் அட்லீ. இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது.
“புள்ள மேல கைய வைக்கிறதுக்கு முன்னாடி அப்பன தொடுடா பாக்கலாம்” என செம ஸ்டைலிஷான மேக்கிங், அசத்தலான ஆக்ஷன், சிறப்பான நடிப்பு என அனைத்தும் சேர்ந்த ஒரு கலவையாக ஜவான் ட்ரைலர் தூள் கிளப்பியுள்ளது.
ரஜினின் ஜெயிலர் ஹிட் ஆனதைப் போல ஷாருக்கானின் ஜவானும் மாபெரும் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும், அட்லீயின் திரைக்கதை வேற லெவெலில் இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.