மெட்டி ஒலி சீரியலை இயக்கி அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ‘மெட்டி ஒலி கோபி’ என்ற பெயரில் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் திருமுருகன்.
கடந்த 2002ம் ஆண்டு இந்த சீரியல் ஏப்ரல் 8 தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த சீரியல் அக்டோபர் 14, 2005 வரை ஒளிபரப்பானது. அதன் பின்னர், இந்த சீரியலை மறுஒளிபரப்பு செய்த போதும் அதனை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர்.
இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்ரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜ்காந்த், சேத்தன், சஞ்சீவ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கதைப்படி இந்த சீரியலில் ஒரு தந்தை.. அவருக்கு 5 மகள்கள், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர் படும் கஷ்டங்களை கருவாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது இந்த சீரியல்.
அதனைத் தொடர்ந்து, இயக்குனர் திருமுருகன் கடைசியாக ‘நாதஸ்வரம்’ என்கிற தொடரை இயக்கிய நிலையில், அந்த சீரியலும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் தமிழில் எம் மகன் என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.
அந்த படத்தில், பரத், கோபிகா, நாசர், சரண்யா, வைகை புயல் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். முதலில், இப்படத்திற்கு ‘எம்டன் மகன்’ என்று பெயரிடப்பட்டு பின்னர், ‘எம் மகன்’ என பெயர் மாற்றப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை ருசித்தது. மேலும், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் வென்றது.
இப்படியிருக்க தற்போது சன் டிவியில் விரைவில் ஒரு புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாகவும், அது 90ஸ் கிட்ஸின் மோஸ்ட் பேவரைட் சீரியலாக இருந்த மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் தான் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த சீரியலை திருமுருகன் தான் இயக்க உள்ளார் எனவும், அதனை தனது திரு பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.