கன்னட நடிகர் சூரஜ் குமார் சாலை விபத்தில் காலை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 வயதான சூரஜ் குமார் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் நெருங்கிய உறவினர். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸின் மகன் சூரஜ். சூரஜ் ஸ்வயனா ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் மருமகன் ஆவார்.
‘பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா’ படத்தின் மூலம் சூரஜ் குமார் ஹீரோவாக அறிமுகமார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் துருவன் தற்போது ‘ரத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் துருவனுக்கு ஜோடியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கிறார்.இந்த நிலையில்,சூரஜ் குமார் கர்நாடக மாநிலம் மைசூரு-குண்ட்லுபேட் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமை மாலை 4 மணியளவில் டிராக்டரை முந்திச் செல்ல முயன்று எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சூரஜ் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவர் மைசூரில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் சூரஜின் வலது கால் நசுங்கியது. அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் வலது முழங்காலின் கீழ் பகுதியை அகற்றியதாக கூறப்படுகிறது.