தமிழ்நாடு பாஜக சார்பில் 4 நாட்களுக்கு 5,000 வழிபாட்டுத் (Cleaning work) தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஶ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது .
இதையடுத்து , நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்துள்ளார்.
பாரத பிரதமரின் அறிவுறுத்தலை அடுத்து , இன்றைய தினம் காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் சேர்ந்து நானும் தூய்மை பணியில் ஈடுபட்டேன் மேலும், இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக
(Cleaning work) தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சகோதர சகோதரிகள் இந்த இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உத்தரபிரசேத மாநிலம் அயோத்தியில்,ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.
கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/transport-workers-negotiations-postponed/
கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்து மத தலைவர்களை தவிர, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .