தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் (Tasmac Liquor Stores) படிப்படியாக மூடப்படும் என தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 500 டாஸ்மாக் மது கடைகள் (Tasmac Liquor Stores) மூடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, நேற்று தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக 500 டாஸ்மாக் இன்று மூடப்பட்டது.
அதன்படி, சென்னை மண்டலம் 138, கோவை-78, மதுரை-125, சேலம்-59, திருச்சி -100 உட்பட 500டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 16 கடைகள் மூடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கேகே நகர், பாபு ரோடு, பெரிய கடை வீதி, கருர் பைபாஸ் சாலை, ஸ்ரீரங்கம், அபிஷேகபுரம், தேவதானம், உறையூர், திண்டுக்கல் சாலை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட 11 இடங்களிலும். மேலும், திருச்சி மாவட்டத்தில் கல்லக்குடி, லால்குடி மணப்பாறை தாலுகா செவலூர் உள்ளிட்ட ஐந்து இடங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டு மட்டுமே உள்ளது. ஆனால், அங்கு இருக்கும் மதுபான பாட்டில்கள் அகற்றப்படவில்லை. அது எப்பொழுது அகற்றப்படும் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதை ஒட்டி திருச்சியில் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றுள்ளனர்.