சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ. 2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 60 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சுற்றுலா பேருந்துகளை முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.. சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன.மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் – மெட்ரோ இரயில் பயணம்- விமானப் பயணம் அழைத்துச் சென்றோம்.
https://x.com/mkstalin/status/1729774710547001615?s=20
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன்.இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.