மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை (Jallikattu stadium) இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழர்களின் முக்கிய பண்பாட்டுத் திருவிழா பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு முழுவதிலும் ஜல்லிக்காட்டு போட்டிகள் நடைபெறும்.
தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த இந்த விளையாட்டு, அலங்கா நல்லூர், பாலமேடு, அவனியாபுறம் ஆகிய இடங்களில் கோலாகலமாக நடைபெறும். இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு ஒவ்வொரு வருடமும் கூடுவது வழக்கம். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கென்று தனியாக இடம் எதுவும் இல்லை என்பதால் ஊருக்குள்ளேயே இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த சமயங்களில் வாடிவாசல் அருகேயுள்ள காலரிகளில் அமர்ந்து, விஐபிக்கள் நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள். ஆனால், பொதுமக்களால் இப்போட்டிகளை வசதியாக காண முடிவதில்லை.
இந்த நிலையில் தான், அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலவர் முக ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பைச் செயற்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை (Jallikattu stadium) கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : vishnu vishal : மீண்டும் இணைந்த “கட்டா குஸ்தி” கூட்டணி
“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
விழா நிகழ்ச்சிகள் முடிந்ததுமே, புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறவுள்ளது. இதனால் தென் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம் அமைக்கட்டுள்ளது.
ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம்,
நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் அமைந்துள்ளது