கோயம்பேடு பேருந்து நிலையத்தை பல்லுயிர் பூங்காவாக (CMBT bus stand) மாற்ற வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி வலியுறுத்தி உள்ளார் .
காலநிலை மாற்றம் நீரிடர் சென்னைக்கான செயல் திட்டமும் உத்தியும் குறித்த கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய சௌமியா அன்புமணி கூறியதாவது :
சென்னையை சுற்றி நிறைய நீர்தேக்கங்கள் உள்ளன. மழை நீர் வடிகால்கள் கட்டமைப்புகள் உள்ளன. ஆனாலும் வெள்ளத்தால் நாம் தத்தளித்தோம்.
இங்கு ஏரிகள் மீது வீடுகள் கட்டப்படுகின்றன. கேட்டால் ஏரி திட்டம் என்கிறார்கள். அதில் அரசு அதிகாரிகளே குடியேறுவதுதான் விநோதமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
சென்னைக்கு தேவையான தண்ணீர் மழையின் வாயிலாக நமக்கு கிடைத்தாலும், முறையான சேமிப்பு இல்லாததால் அவை வீணாக கடலில் கடந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
சென்னையில் பல்லுயிர் பூங்கா இல்லை. பெரு நகரங்களில் பூங்கா கட்டாயம் உள்ளது. கோயம்பேட்டில் இருந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது கோயம்பேட்டில் மால் வர போகிறது என பலர் கூறி நான் கேட்கிறேன் அதனால் என்ன பயன் என்பது இசங்கு சுத்தமாக தெரியவில்லை.
அங்கு பூங்கா அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இயற்கையை பாதுகாக்க நிறைய போராடி வருகிறோம்.
அரசுதான் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல மாற்றங்களால் (CMBT bus stand) சென்னை மாநகரம் தற்போது கடும் போக்குவரத்துக்கு இடையில் குடும்பம் நடத்தி வருகிறது.
இப்படி இருக்கும் சூழலில் சென்னையின் இந்த போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறத்து.
Also Read : https://itamiltv.com/tn-ka-cauvery-problem-is-govts-fault-annamalai/
ஆனால் என்னவோ தெரியவில்லை போக்குவரத்து நெரிசல் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று.
இன்று இல்லை என்றாலும் என்னராவது ஒரு நம் மாநகரமும் உலகம் புகழ்ந்து பேசும் அற்புதமான வாசித்திகளுடன் கெத்து காட்டும் என்ற நம்பிக்கையில் பயணிப்போம்.