கேரளாவில் ஓடும் ரயிலில் எஞ்சினில் இருந்த பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் மத்தியில் சிறிது பீதியும் பதற்றமும் ஏற்பட்ட நிலையில் ரயில் நிறுத்தப்பட்டு பணியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்கண்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை வள்ளத்தோடு என்ற இடத்தில் செல்லும் போது பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் இடையே பீதியும் பரபரப்பும் நிலவியது .
Also Read : லாரி மீது மினி பஸ் மோதி கோர விபத்து – கர்நாடகாவில் நிகழந்த சோக சம்பவம்..!!
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பணியாளர்கள், எஞ்சினை பெட்டிகளுடன் இணைத்தனர். பின்னர் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு ரயிலானது கொண்டு செல்லப்பட்டு முழு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது .
பணியாளர்கள் ஆய்வு முடிந்த பின் எந்த வித கோளாளரும் இல்லை என்பது உறுதியான பின்னரே ரயில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .