இந்திய நிலக்கரி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 481 பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆகஸ்ட் 07 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 481 பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆகஸ்ட் 07 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய நிலக்கரி நிறுவனம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு யூலை 08 ஆம் தேதி நாளை காலை 10.00 மணி முதல் ஆகஸ்ட் 07 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 2022 மே மாதம் 1 ஆம் தேதியின் படி 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும் தெரிவிக்கபப்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப கட்டமாக ₹. 50,000 – 1, 60,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலமாக ₹. 50,000 ரூபாய் ட்ரைனிங் காலத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் ட்ரைனிங் முடிந்த பிறகு வைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ₹. 60,000 – 1, 80,000/-ம் வரை சம்பளம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.