சென்னையில் 518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் சுமார் 70 கிராம் வரை குறைவான எடையில் மோசடி (Fraud) விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக மோசடி (Fraud) நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இதையும் படிங்க : https://itamiltv.com/the-number-of-confirmed-corona-infection-across-the-country-has-increased-to-4565-3-people-have-died-india/
சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் சுமார் 70 கிராம் வரை குறைவான எடையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் ஆவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாத வகையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் பால் பாக்கெட்டுகளின் எடை சரியான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அம்பத்தூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று (02.01.2024) அதிகாலையில் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் கொண்ட பால் முகவர் ஒருவர், தான் கொள்முதல் செய்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்தையும் (180லிட்டர்) ஒவ்வொன்றாக எடை போட்டுப் பார்த்ததில் 518 முதல் 520கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் 448, 449, 450கிராம் என சுமார் 70கிராம் வரை மிகவும் எடையளவு குறைவான நிலையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ஏற்கனவே கடந்தாண்டு வேலூர், சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் இதே போன்று 450கிராம், 470கிராம் என எடையளவு மிகவும் குறைவான நிலையில் இருந்ததும், அவ்வாறு எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து, விநியோகம் செய்த அதிகாரிகள், ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அது மீண்டும் தொடர்கதையாகி வருகிறது.
இது சாதாரணமாகவோ அல்லது யதேச்சையாகவோ நடந்தது போல் இல்லாமல், பால் பாக்கெட்டில் எடையளவு குறைவாக பேக்கிங் செய்து விநியோகம் செய்தால் யார் கண்டு பிடிக்கப் போகிறார்கள்..? என்கிற தைரியத்தில் திட்டமிட்டு செய்தது போல் தெரிகிறது.
எனவே, தற்போது எடையளவு குறைவான அளவில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல் முறையான விசாரணைக்கு உட்படுத்தி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மீதும், குறிப்பாக DGM, AGM, Marketing அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.