போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ரூ.1லட்சம் உத்தரவாத தொகையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
Also Read : தாய்லாந்தில் எளிமையாக நடைபெற்ற வரலட்சுமியின் திருமணம் – வைரல் போட்டோஸ்..!!!
இதையடுத்து இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டிருந்தனர்
பின்னர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது தற்போது டெல்லியில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ரூ.1லட்சம் உத்தரவாத தொகையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதுமட்டுமின்றி வழக்கின் விசாரணை முடியும் வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.