குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென வெளியேறி இருக்க நிலையில மிகப்பெரிய சர்ச்சையா இது வெடிச்சுருக்கு. அதுவும் பிரியங்கா தான் இதற்கு காரணம் என தெரியவந்த பின் தொடர்ந்து அதுதொடர்பான பல விஷயங்கள் சோசியல் மீடியால வைரலாகிட்டு இருக்கு.
அதுமட்டுமில்லாம மணிமேகலை ஷோவ விட்டு வெளியேறின அன்னைக்கு ப்ரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததா சொல்லி ஆடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், அது முற்றிலும் பொய்யான ஒரு ஆடியோ அப்டீன்றதும் தெரிய வந்துச்சு..
இது சம்பந்தமா மணிமேகலை வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து இந்த பிரச்சனை தொடர்பா பிரபலங்களும் பேச துவங்கிவிட்டனர்.
அப்படி பிரபல நடிகர் ஆர்.ஜே. ஷா, மணிமேகலை – பிரியங்கா இடையே நடந்த விஷயம் சமந்தமா விஜய் டிவி தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரித்துள்ளார். அதன்பின் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது யூ டியூபில் இல்லை. தற்போது அது திடீரென நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஆர்.ஜே ஷா பேசிய விஷயங்களை நெட்டிசன்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வீடியோவில் “தயாரிப்பு நிறுவனம் சொல்லியும் மணிமேகலை கேட்கவில்லை. பிரியங்கா கிட்ட பேசவும் மாட்டீங்க, ஆனா ஷோ பண்ண போறீங்களா என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டதற்கு ஆமா என கூறியதுடன் நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன் ஆனால், அவள் இடம் பேசமாட்டேன் என்று மணிமேகலை கூறியதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த சீசன் முடியும் வரை நீங்க விஜே வா இருக்கனும், எல்லோருடன் நல்ல பழகணும் என்பது தான் உங்களுடைய வேலை. ஆனால் அதை நீங்கள் பண்ணமாட்டேன் என கூறினால், வெளியே போய்விடுங்கள் என தயாரிப்பு நிறுவனம் தான் மணிமேகலையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது. மணிமேகலை தானாக வெளியேற வில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் கூறியதாக ஆர் ஜே ஷா தெரிவித்துள்ளார்.
வெளியே வந்த மணிமேகலை இதுகுறித்து வீடியோ போட்டதினால் விஜய் டிவிக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு மாற்று கருத்து இருக்கிறதாம். இது ஒரு குடும்பம், இந்த குடும்பத்திற்குள் நடப்பதை வெளியே பேசக்கூடாது.
ஏற்கனவே ஒரு முறை சுனிதாவிற்கும், மணிமேகலைக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. ஆனால், அதனை தயாரிப்பு நிறுவனமும் சரி, விஜய் டிவியும் சரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அப்படியே விட்டுவிட்டனர். அதை பற்றி சுனிதாவும் எதுவும் வெளியே வந்த சொல்லவில்லை, விஜய் டிவியும் அதை பற்றி கூறவில்லை.
ஆனால், மணிமேகலை இப்படி செய்தது விஜய் டிவிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தான் மணிமேகலைக்கு Youtubeல் 2 மில்லியன் subscribers. போன முறை தனக்கு தொகுப்பாளர் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறினார்.
பின் தொகுப்பாளர் இடம் கிடைத்து நிகழ்ச்சிக்குள் வந்தார். தற்போது தொகுப்பாளர் இடம் கிடைத்தும் தனக்கு செட் ஆகவில்லை என கூறி ஒரு அவசரத்தில், கோபத்தில் மணிமேகலை வெளியே சென்றுவிட்டார். அப்போது நாங்கள் professional-ஆக இருந்திருக்கிறோமா அல்லது மணிமேகலை professional-ஆக இருந்திருக்கிறாரா என தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளார்களாம்.
அடுத்த சீசன் பிரியங்கா இருக்க மாட்டாங்க, அதுக்குள்ள ஏன் மணிமேகலை இப்படியொரு முடிவு எடுத்தார் என தெரியவில்லை. அவங்களா அவங்க தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டார்” என தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரித்த போது இந்த தகவல்கள் கிடைத்ததாக ஆர்.ஜே. ஷா கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.