காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு சாலைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவருடைய KTM 390 அட்வென்ச்சர் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தோழர்களுடன் சாலைப் பயணம் மேற்கொள்கிறார்.
வழக்கம் போல், அஜித் குமார் மற்றொரு பைக் ட்ரிப் சென்றுள்ளார் என்று நினைத்தவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி பொது இடத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது இது முதல் முறையல்ல.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லடாகிற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார்.
லடாக்கில் உள்ள பாங்கோக் ஏரிக்கு செல்லும் வழியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர் பாரத் ஜோடோ யாத்ராவின் போது ராயல் என்ஃபீல்டு 350 ஐ ஓட்டிக்கொண்டிருந்தார்.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் இது போன்ற சுற்றுலா சாகசங்களுக்கு வரும்போது பிரபலமான தேர்வுகளில் ஒன்றாகும்.
டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள மோட்டார் மெக்கானிக்களுடன் பேசிய அவர், தனக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவ்வப்போது அதைச் செய்ய முடியவில்லை கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
எம்பி ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை லடாக்கிற்கு தனது இரண்டு நாள் பயணத்தின் போது லேவில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் உரையாடினார்.