பிகாரில் தேர்தல் பரப்புரையின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நின்று கொண்டிருந்த மேடை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகார் மாநிலம் பாலிகஞ்சில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது பாட்லிபுத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் RJD தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்திக்குஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தி அங்கு அமைக்கபட்டு இருந்த மேடையில் ஏறி தொண்டர்களிடம் கையை அசைத்தபோது திடீரென மேடை உடைந்து விழுந்ததால் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.