ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவரது மனைவி பிருந்தா (24). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கர்ப்பமாக இருந்த பிருந்தா, கடந்த 27ம் தேதி, வயிற்றில் 4 மாத குழந்தையுடன் வீட்டில் இறந்து கிடந்தார். கணவர் கார்த்திக் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மகள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து போனதாக பிருந்தாவின் தாய் கண்டு அதிர்ச்சி அடைந்தார் .இந்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, ஈரோடு கோட்டாட்சியர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணை முடிவில், பிருந்தாவின் காதலன் திண்டுக்கல்லை சேர்ந்த அரவிந்த் (24) தான் அவரை கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து அரவிந்திடம் விசாரணை நடத்திய முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
“திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் படித்து வந்த பிருந்தா, கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பு அரவிந்த் என்பவரை காதலித்து வந்தார். அப்போது அரவிந்தனுக்கு 19 வயது, பிருந்தாவுக்கு 21 வயது. இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியூர் சென்றனர். இதையறிந்த அரவிந்த் மற்றும் பிருந்தாவின் இரு வீட்டாரும், அவர்களை தேடி ஊருக்கு அழைத்து வந்தனர்.“இருவரும் படிப்பை முடிக்க வேண்டும் என்றும் பிறகு திருமணம் செய்து வைப்போம் என்று கூறி இருவரையும் பிரித்து விட்டனர்.
இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்த்து வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து,கார்த்திக்கை திருமணம் செய்திருந்தாலும், அவர் தனது முன்னாள் காதலன் அரவிந்துடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரவிந்திடம் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.
இதையறிந்த கார்த்திக் பிருந்தாவை அவ்வப்போது கண்டித்தும், அரவிந்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.ஆனாலும் அரவிந்துடனான உறவை பிருந்தா கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. கார்த்திக் வெளியூர் சென்றதும், அரவிந்த் பிருந்தாவின் வீட்டிற்கு வந்ததாகவும், இருவரும் தனிமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிருந்தா கர்ப்பமானார்.
இதற்கிடையில், திண்டுக்கல்லில் உள்ள தனது சகோதரியின் மகளின் கத்து குத்து திருவிழாவுக்கு செல்வதாக கூறி கார்த்திக் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் புறப்பட்டார். முன்னதாக பிருந்தா அரவிந்திற்கு போன் செய்து கார்த்திக் திண்டுக்கல் செல்வதால் ஈரோடு வருமாறு கூறியுள்ளார். இதனால் கார்த்திக் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை 7 மணிக்கும், அரவிந்த் 8 மணிக்கும் ஈரோடு வந்தடைந்தனர்.
நசியனூர் ராயபாளையத்தில் உள்ள பிருந்தாவின் வீட்டிற்கு காலை 8.30 மணியளவில் அரவிந்தும், பிருந்தாவும் சென்று தனியாக இருந்தனர். பின்னர், முட்டை பிரியாணியை இருவரும் சமைத்து சாப்பிட்டனர். அப்போது பிருந்தா அரவிந்தனிடம், “என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். கார்த்திக் எங்கள் உறவை அவமதித்து துஷ்பிரயோகம் செய்கிறார். நான் அவருடன் வாழ விரும்பவில்லை’ என்றார்.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து பிருந்தாவை செல்போனில் அழைத்த கார்த்திக், திண்டுக்கல் வந்துவிட்டதாக கூறினார். அப்போது பிருந்தா சிரித்துக்கொண்டே கணவருடன் தொடர்ந்து 1 மணி நேரம்போசியுள்ளார்.
இதனால் அரவிந்த் கடும் கோபத்தில் பிருந்தாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார் .இதையடுத்து அரவிந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.