IC – 814 – THE KANDAHAR HIJACK வலைதள தொடரில் பொய்யான பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உண்மையான பெயர் சேர்க்கப்படும் என இந்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
IC 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 1999 டிசம்பர் 24 அன்று பயங்கரவாதிகள் 5 பேர் காந்தஹாருக்கு கடத்திச் சென்றனர்.
கடத்திய பயங்கரவாதிகள்:
1) சன்னி அஹமத் காஸி
2) ஷகிர்
3) மிஸ்த்ரி ஸஹூர் இப்ராஹிம்
4) ஷாஹித் அக்தர் சயீத்
5) இப்ராஹிம் அக்தர்
இந்த பயங்கரவாதிகளின் உண்மைப் பெயரை மறைத்து,
1) போலா
2) சங்கர் என்ற ஹிந்துப் பெயர்களை வைத்து நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றினை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது.
அப்பட்டமான இந்த பொய்க்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மத்திய அரசும் விளக்கம் கேட்டு நெட்ஃபிளிக்ஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், கட்டுக் கதைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் உண்மையான பெயர்களை சேர்த்து வெளியிடுவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒருபக்கம் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் மறுபக்கம் இந்த தொடர் பெரும் சர்ச்சையை கிளப்பி கடும் வாக்குவாதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.