சுவர் ஏறி குதித்த கூல் சுரேஷ் (cool suresh) : பிக்பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த வாரம் எவிக்ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் கூல் சுரேஷும் (cool suresh) ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நிலையில், இவர் கடந்த 10 வாரங்களாக எவிக்ஷனில் இருந்து தப்பித்து இறுதிப்போட்டியை நோக்கி நகர்ந்து வந்ததுள்ளார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேற முடிவெடுத்து சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே வீட்டின் நியாபகமாக இருக்கிறது எனக் கூறி போட்டியாளர்களிடம் தன்னை நாமினேட் செய்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்து வந்தார். அவரின் விருப்பப்படியே பெரும்பாலானோர் கூல் சுரேஷை நாமினேட் செய்தனர்.
இதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் அவர் இடம்பிடித்து உள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தால் அதில், வெளியேற்றப்படும் நபராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இன்று சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளார். ஆனால், அவரால் ஓரளவுக்கு மேல் ஏற முடியாததால் மணி உதவியுடன் மீண்டும் கீழே இறங்கிவிட்டார். இதுகுறித்து மணிச்சந்திராவும் யாரிடமும் சொல்லவில்லை.
அதன் பிறகு பிக் பாஸ் கூல் சுரேஷை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து எதற்காக நீங்க இப்படி ஒரு செயலை செய்றீங்க? இதனால் நீங்க என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்க, அதற்கு கூல் சுரேஷ் எனக்கு வீட்டில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை தீர்க்காமல் நான் வந்துவிட்டேன். இப்போ எனக்கு வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதற்கு பிக் பாஸ் நீங்க இப்படி செஞ்சி கெட்ட பேரோட போகிறது உங்கள் வீட்டில் உள்ளவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா? என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்கிறார். பிறகு எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நல்லபடியாக விளையாடி வெற்றியோடு போக வேண்டும் என்று தானே இங்கே வந்தீர்கள்.இப்படி நீங்களாக வெளியே போகிறேன் என்று வீட்டின் ரூல்ஸ்களை மீறி இவ்வாறு செய்தால் உங்கள் குடும்பத்தினரும் கஷ்டப்படாதானே செய்வார்கள் என்று அட்வைஸோடு சேர்த்து அதட்டும் தோணியிலும் பேசியிருந்தார்.
அதன் பிறகு ஒரு வழியாக கூல் சுரேஷ் சமாதானம் ஆகி இருக்கிறார். அதே நேரத்தில் இது 24 மணி நேர எபிசோடில் இன்று காலையில் நடந்திருப்பதால் இது ஒரு மணி நேர எபிசோடில் ஒளிபரப்பாகுமா என்பதும் தெரியவில்லை.