புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவிய கொரானா தொற்று பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு, பின்னர் கொரோனா தொற்று சற்று குறைவடைந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில் இந்தியாவில் சற்று குறைவடைந்திருந்த கொரோனா பரவல் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட உருமாரிய வைரஸான ஒமைக்ரானும் அதிதீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கி உள்ளது. அதன் படி புதுச்சேரி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதோடு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 2,093 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,40,710 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,893 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.