காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதால், இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts