6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்திருக்கிறது.
கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதனைக் கட்டுபடுத்தும் வகையில் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது. அதன் படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி குறித்து ஏற்கெனவே கூட்டம் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சிஐஐ மாநாட்டில் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் 6 மாதங்களில் தடுப்பூசி அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.