campaign ends tomorrow evening : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரம் 19ஆம் தேதி காலை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆனையம் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவால் ‘டைமிங்’ போட்டு தங்கள் வேலைகளில் பரபரப்பாகி உள்ளன அரசியல் கட்சிகள்.
தற்போது செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.
எனவே, புதிய நாடாளுமன்ற அவையை தேர்ந்தெடுக்கும் விதமாக இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி, முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
அதில் முதற்கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும்,
நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
இதில் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள், 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள்,
55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் மற்றும் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்கான தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் விதி முறைகளும் நடைமுறைக்கு வந்தன.
அதன்படி, ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவு தரக்கூடாது.
சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வீட்டின் முன்னால் பிரசார கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது. அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.
கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த இடங்களை தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தக் கூடாது.
இதையும் படிங்க : April 16 Gold Rate : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பரிசு வழங்குவது தேர்தல் நடத்தை விதிப்படி குற்றமாகும். வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வேட்பாளர்கள் பணம் கொடுக்க கூடாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல வாக்காளர்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. தனிப்பட்ட நபரின் நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.
ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் கிழிக்கவோ, அகற்றவோ கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீசிடம் தகவல் அளிக்க வேண்டும்.
ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.
ஊர்வலத்துக்கு அனுமதி பெற்றிருந்தால் அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக்கூடாது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களின் உருவ பொம்மைகளை எரிக்க கூடாது.
அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்படும்.
அரசு கட்டிடங்களில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்படும். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவியை ஒப்படைக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும். அனைத்து மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நிலைக்குழுக்கள், பணியாற்றுவதற்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும் campaign ends tomorrow evening.
அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்பான சின்னங்கள், வாசகங்கள் மறைக்கப்படும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அழிக்கப்படும்.
அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றப்படும். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். தனி நபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் குறைதீர்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படும்.
பறக்கும் படை சோதனையின் போது குறிப்பிட்ட அளவு பணத்துக்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
வங்கி பணபரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16 ஆம் தேதி முதலே நடைமுறையில் உள்ளன.
அந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதுதான்.
மேலும், வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்பவர்களும் தங்கள் பரப்புரைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாகும்.
அதன்படி, வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில், “தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் ஏப்ரல் 17ஆம் தேதியான நாளை மாலை 6:00 மணி உடன் அனைத்து வகையான பிரச்சாரங்களும் நிறைவடைகிறது.
அந்த நேரத்திற்குள் வேட்பாளர்கள் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும். 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருள் வழங்குவது பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், விதிமீறல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெரும்பாலும், வாக்குப்பதிவு நடை பெறுவதற்கு இரு தினங்கள் இருக்கும் நிலையிலோ அல்லது அதற்கு முதல் நாள் இரவோ தான் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு குவிந்து வருவது ஏற்கனவே பலமுறை உறுதியான நிலையில்,
இம்முறை அதை தடுப்பதற்காக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர் தேர்தல் பொறுப்பு அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் campaign ends tomorrow evening.
எனவே, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அந்த கால கட்டத்திற்குள் வாக்காளர்களிடம் தங்கள் பிரச்சாரத்தை எடுத்துச் செல்லும் பணியில் அரசியல் கட்சிகள் அனைத்துமே மேல் மட்டம் முதல் கிளைக் கழகத்தினர் வரை விறுவிறுப்பாக களமிறங்கி உள்ளனர்.
டாஸ்மாக் விடுமுறை :
அதே போல, நாளை முதல் தேர்தல் நடைபெறும் 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளும் தமிழ்நாடு முழுவதும் மூடப்படுகிறது.
மேலும், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 21ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது!
இதையும் படிங்க : இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி