அமைச்சர் செந்தில் பாலாஜியின் (senthil balaji) நீதிமன்ற காவலை வரும் 22ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார்.
அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு இதய பாதிப்பு ஏற்படவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக தற்போது செந்தில் பாலாஜி நீடிக்கிறார்.
செந்தில் பாலாஜியின் (senthil balaji) வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.
அதில் அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 6 மாத காலமாக சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/avindar-chandrasekaran-says-he-admitted-in-icu-for-this-reason/
இதற்கிடையில் 3-வது முறையாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.
https://x.com/ITamilTVNews/status/1745367367633559837?s=20
இது தொடர்பான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வருகிற 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வரவுள்ளதால் அவர் வீட்டிற்கு வந்து விடுவாரா என்று அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.