அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 57வது முறையாக நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகிறது .
சிறையில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுவதால் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஜாமீன் மனுவில் தெரிவிக்கப்பட்டது .
Also Read : பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை அதிர்ச்சியளித்தது – குடியரசுத் தலைவர்
இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இந்த ஜாமின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.
சிறையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜாமீன் கேட்டு செந்தில்பாலாஜி தரப்பில் பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது அவரது உடல் நிலையை மேலும் பலவீன படுத்தும் என்றும் அவரது குடும்பத்தார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.