கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறுவுறுத்தியுள்ளது. அதன்படி 12 முதல் 16 வாரங்கள் உள்ள கோவிஷீல்டு இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பரவத்தொடங்கியதை அடுத்து அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 முதல் 16 வயதுடைய சிறார்களுக்கும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இரண்டு தவணையாக போடப்படும் தடுப்பூசியில், கோவிஷீல்டு இரண்டாவது தவணைக்கு தடுப்பூசிக்கு 12 முதல் 16 வாரங்கள் கால இடைவெளி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இதனைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இது பரிந்துரை மட்டுமே என்றும், இதில் எந்தவொரு இறுதி வரையறையும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வோரை ஊக்கப்படுத்தவும், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போருக்காவும் மட்டுமே பரிந்துரைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.