வடசென்னை அருகே மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் மாடு ஒன்று பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடசென்னை (North Chennai)திருவொற்றியூரில் அமைந்துள்ள வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோவிலின்”அருகே சுற்றி திரியும் மாடு தான் நந்திஸ்வரன்.
6 அடி உயரத்தில் திமிலுடன் ஜல்லிக்கட்டு காளை போல காட்சியளிக்கும் இந்த மாட்டிற்கு சுமார் 15 வயதிருக்கும் என்றும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாடு கோவிலையே சுற்றி சுற்றி வந்ததால் இதை கோவில் மாடாகவே அங்கிருக்க பொதுமக்கள் பக்தர்கள் என அனைவரும் பாவித்து வருகின்றனர்.
இந்த மாடு அப்பகுதியில் இருக்க கூடிய யாருக்கும் எந்த வித தொந்தரவும் கொடுத்ததில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் அரும்பாக்கத்தில் பள்ளி சிறுமியை மாடு ஒன்று முட்டிய சம்பவம் வைரலான நிலையில் கடந்த 21 ஆம் தேதி அன்று மாநகராட்சி சார்பில் அதன் ஊழியர்கள் கரடு முரடாக மாட்டினை வாகனத்தில் மூக்கில் கயிறு கட்டி அழைத்து சென்றனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாட்டினை மாநகராட்சி அதிகாரிகளோடு போராடி மீட்டு வந்ததாகவும், ஏழு நாட்களுக்கு பின் திரும்பிய நிலையில் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்ததால் மாட்டின் இறப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களுமே காரணம் என பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்,நேற்று பிற்பகல் 3 மணிக்கு திரும்ப மாநகராட்சி அதிகாரிகளால் அழைத்து வரப்பட்ட மாடானாது மாலை 6 மணி அளவில் கோவிலை பார்த்தபடி தனது மூச்சை நிறுத்தி சுருண்டு விழுந்ததாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாடு இறந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளில் இருக்க கூடிய பலரும் மாட்டிற்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர்.