இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை தொகுத்து, பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக பதிவிட முடியும் என்கிற புதிய அம்சத்தை அந்நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.
இந்நிலையில், பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புது வசதிகள், அப்டேட் வெளிவந்துள்ளது. ஃபோனில் உள்ள இரண்டு கேமராக்களையும் பயன்படுத்தி ரீல்ஸ் செய்வது, வித விதமான ரெம்பிளேட் எனப் பல புது வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
பயனர்கள் பதிவிடும் 15 நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோக்கள் மட்டுமே இனி வீடியோ சென்ஷனில் இடம்பெறும். 15 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்கள் அனைத்தும் தானாகவே ரீல்ஸ் பக்கத்திற்கு மாற்றி வந்துவிடும்படி புது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். விரைவில் வர உள்ள புது அம்சத்தின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக தொகுத்து பதிவிடலாம்.
இதற்காக விதவிதமான டெம்ப்ளேட், ரீமிக்ஸ் தளவமைப்புகளையும் அந்நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.