நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை பெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிய இந்திய அணி, அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வியடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. நவம்பர் 17-ம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடர் நவம்பர் 21-ம் தேதி நிறைவடைகிறது.
இதற்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரூத்ராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐய்யர், யஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்தர் அஸ்வின், அக்ஷர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகம்மது சிராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.