கய் விட்டல் (Guy Whittall) முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரம். 1993 மற்றும் 2003 க்கு இடையில் ஜிம்பாப்வே அணிக்காக 46 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விட்டல், இரு வடிவங்களிலும் 4912 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் டெஸ்டி போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 88 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
51 வயதான கய் விட்டல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஹுமானியில் தனது குடும்பத்துடன் சஃபாரி பிசினஸ் நடத்தி வருகிறார்.
கய் விட்டல் ஜிம்பாப்வேயின் ஹுமானியில் அவர் நடத்தும் கன்சர்வேன்சி வழியாகத் தனது நாயுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில், சிறுத்தை ஒன்று விட்டல் மற்றும் அவரது நாய் வழிமறைத்தது. என்ன செய்வதென்று யோசிப்பதற்க்குள் சிறுத்தை அவர்மீது பாய்ந்து அவரைத் தாக்கத் தொடங்கியது.
சிறுத்தை தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியாமல் போராடிய இவருக்கு அவரது வளர்ப்பு நாய் உதவியது. அவரது செல்ல நாய் சிக்காரா, விடலை தாக்கிய சிறுத்தையை எதிர்த்துப் போராடியாது. மேலும் விட்டலைக் காப்பாற்றும் இந்தச் செயலில் வளர்ப்பு நாய் கடுமையாகப் போராடியதில் அதற்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
Also Read : சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!!
சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினவர் விட்டலையும், வளர்ப்பு நாயையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த விட்டலின் புகைப்படங்கள் அவரது மனைவியால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
ஹன்னா ஸ்டூக்ஸ் விட்டால், அவரது பதிவில் தனது கணவர் அனுபவித்த சோதனையை விவரித்தார், இந்தத் தாக்குதலில் அவர் அதிக இரத்தத்தை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பலரும் அவரது நலம் குறித்து கமெண்ட் செய்து வந்தனர். இதற்குப் பதில் வெளியிட்ட ஹன்னா, விட்டலுக்காகப் பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நலம் விரும்பிகளின் நூற்றுக்கணக்கான ஆதரவு செய்திகளால் கய் மற்றும் நான் மகிச்சியாக இருக்கிறோம். அவரது காயங்களுக்குச் சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சை ஒன்று செய்ய வேண்டியுள்ளது.
மேலும் சிகிச்சை மில்டன் பார்க் மருத்துவமனையில் நடக்க உள்ளதால், இபோது அவர் ஹராரேவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
மேலும் அவர் தனது பதிவில், விட்டலுக்கு உதவவும், சிறுத்தையிடமிருந்து அவரைக் காப்பாற்றவும் சிகாரா அங்கு இருந்ததால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி, இல்லையெனில் அது எப்படி முடிந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்.
“நாங்கள் சிகாராவுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், சிக்காரா பரிசாகக் கூடுதல் ( Guy Whittall ) சிக்கன்களைப் பெறப் போகிறார். அவருக்குச் சில கீறல்கள் ஏற்பட்டு இருப்பதால் அவர் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை பெற்று இப்போது நலமுடன் உள்ளார். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.