காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கொலை
சம்பவத்தில் 17 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரிமாநிலத்தை அடுத்த காரைக்கால் நிரவி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (13).இவர் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த திடீரென சிறுவனை காணவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் சிறுவன் கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் உடல் இருந்த வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த சிறுவனின் சகோதரியிடம், கொலை செய்த சிறுவன் தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது.
தன் சகோதரிக்காக தட்டிக் கேட்ட 13 வயது சிறுவனை, 17 வயது சிறுவன் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.