இணைய பாதுகாப்பு நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்கில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் உள்ளன.
உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் ‘Blue Screen of Death’ Error ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொழில்நுட்பம், மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் Windows மென்பொருள் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
CrowdStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன.
தொழில்நுட்பம், பொருளாதாரம், தொலைத்தொடர்பு சேவைகள், செய்தி நிறுவனங்கள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் Blue Screen Error ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பம்.
அமெரிக்காவின் 911, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய தளங்கள் முடங்கியிருக்கின்றன.
ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளின் விமான சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
விண்டோஸ் முடங்கியதால் விமான சேவை நிறுத்தம்.
விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் சென்னை, டெல்லி, மும்பை உட்பட உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தம்.