கேரளாவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் கடந்த 2021ம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். ஒன்றும் அறியாத சிறுமிக்கு ஏற்பட்ட இந்த கொடூரம் குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில், அவரின் இரண்டாவது கணவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.
Also Read : இனி உலகநாயகன் என அழைக்க வேண்டாம் – அஜித்தை தொடர்ந்து பட்டத்தை துறந்த கமல்ஹாசன்..!!
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் பத்தனம்திட்டா செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கட்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.