வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கடந்த (01-12-2023) அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (02-12-2023) காலை 05:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வழுவதடைந்துள்ளது . மிக்ஜாம் என பெயரிடப்பட்ள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலின் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.