மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் டிடி தமிழ் (DD tamil) நிகழ்ச்சிகள் இருக்கும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்சன் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எல்,முருகன், இன்று மாலை கேலோ இந்தியா நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
புது வகையிலான தமிழ் டிடி பொதிகை தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு தொடங்க உள்ளது.
டிடி பொதிகை 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொழுதுபோக்கு, கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் டிடி பொதிகையில் ஒளிபரப்பப்படும். டிடி நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகம்.
மேலும் 8 இடங்களில் பண்பலை ஒலிபரப்பு கோபுரங்கள் இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளன. எல்லைப்புற கிராமங்களுக்கும் அரசின் தகவல் ஒலிபரப்பு சேவைகள் கிடைக்கும் வகையில் 2500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றுசேரவும் , பாரதம் வளர்ச்சி பெறவும் தகவல் ஒலிபரப்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
https://x.com/ITamilTVNews/status/1748278302010388950?s=20
டிடி பொதிகையில் பணியாளர் பற்றாக்குறை இருக்கிறது. ஆனாலும் தேவைக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்கள் டிடி பொதிகையில் (DD tamil) இருக்கின்றனர்.
எனவே அவர்களுக்கு மாற்றுப் பணிகள் ஒதுக்கி பணியாளர் பற்றாக்குறை போக்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்.
தமிழ் கலாசாரத்தை நேரில் பிரதிபலிக்கும் வகையில் டிடி பொதிகை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பொதிகை ஒரு பொறுப்புள்ள ஊடகம் , மக்களின் எண்ணத்திற்கு ஏற்பவே அயோத்தி ராமர் கோயில் விழா குறித்த நேரலை ஒளிபரப்பு பொதிகையில் வழங்கப்படும்.
இதையும் படியுங்க : Creamy layer limit – இரு மடங்காக உயர்த்த வேண்டும் -அன்புமணி
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற செய்திகள் வழங்கப்படும்.
அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதே தகவல் ஒலிபரப்பு துறையின் நோக்கம் என்று கூறினார்.