திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரான நிலையில் இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது மத்திய சென்னை திமுக எம்.பி., தயாநிதி மாறனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் எம்.பி.சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
பின்னர் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஜெயவேலு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.
Also Read : குற்றச் செயல்கள் நடக்க பயன்படுவதால் டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை..?
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இபிஎஸ் தெரிவித்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை . செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார் .
இதனையடுத்து விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
70 வயதாகிவிட்டது, மூத்த குடிமகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துவருகிறேன். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் இல்லை. எனவே நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோருகிறேன் என எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.