தலைநகர் டெல்லியில் (Delhi) கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில், இன்று குளிர் அலைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி, பஞ்சாப் , ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது.
ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.
காற்றின் தரம் 200ஐ தொட்டால் அது மிகவும் மாசடைந்துள்ளது என்று அர்த்தம். மட்டுமல்லாது இந்த காற்று சுவாசிக்க ஏற்க தக்கதல்ல. ஆனால் டெல்லியில் காற்றின் தரம் 365ஆக பதிவாகியுள்ளது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/tasmac-shops-across-tamil-nadu-to-remain-closed-today/
இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
பனிமூட்டம் நிலவியதன் காரணமாக நேற்று டெல்லியில் இருந்து மட்டும் 5 விமானங்கள் மாற்றிவிடப்பட்டன. 100 விமானங்கள் தாமதமாகச் சென்றன.
புதுடெல்லி (Delhi) ரயில் நிலையத்தில் இருந்து 30 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், டெல்லியில், கடும் பனிமூட்டம் காரணமாக 30 விமானங்கள் தாமதாகியுள்ளது. 17 விமானங்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பஞ்சாப் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது.
டெல்லி, ஹரியாணா, வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்குவங்கத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்குப் பகுதிகளிலும் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது.
https://x.com/ITamilTVNews/status/1747199853401436475?s=20
குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டமும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடரும். இதனால் டெல்லிக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
காலை நேரத்தில் அடர் பனிமூட்டம் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.