டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு சுய இன்பம் (masturbated) அனுபவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட நபரை பிடிக்க டெல்லி காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நேற்று காலை டெல்லி மெட்ரோ ரயில் வழக்கம் போல சென்று கொண்டிருந்த போது, அதன் ஒரு பெட்டியில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த பெட்டியில், பெண்களின் கூட்டத்திற்கு இடையே 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த பெண்களுக்கு நடுவே முதலில் சற்று சங்கோஜப்பட்டுக் கொண்டே அமர்ந்த அந்த நபர் சிறிது நேரத்தில், தனது செல்போனை எடுத்து பார்க்க தொடங்கினார். அப்போது, அந்த நபர் என்ன பார்க்கிறார் என்பதை கூட்ட நெரிசலில் யாரும் கவனிக்காத நிலையில், திடீரென அவரது செல்போனில் இருந்து பெண் ஒருவர் முனங்கும் சத்தம் கேட்டுள்ளது.
அதனைப் பார்த்த அங்கிருந்த பெண்கள் அவரது செல்போனில் ஆபாசப்படம் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, அந்த இளைஞரும் தொடர்ந்து வெளிப்படையாக சுய இன்பம் செய்து கொண்டிருந்துள்ளார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து விலகி ஓடினர். ஆனாலும், அதை பற்றி கவலைப்படாத அந்த இளைஞர், சுய இன்பம் (masturbated) செய்து முடித்துவிட்டு அடுத்த ஸ்டாப்பில் ஹாயாக இறங்கிச் சென்றார்.
இந்நிலையில், இந்த அருவருப்பான சம்பவம் குறித்து அந்த ரயிலில் பயணம் செய்த பெண்கள், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதன்பேரில், அந்த குறிப்பிட்ட ரயில் பெட்டியில் உள்ள கேமராவை காவல் துறையினர் ஆய்வு செய்த போது இளைஞரின் முகம் சுளிக்க வைக்கும் செய்த மோசமான செயல் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், மேலும், டெல்லி மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் மற்றும் டெல்லி காவல்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், கேமராவில் பதிவாகியுள்ள அந்த இளைஞரை அடையாளம் கண்ட டெல்லி காவல்துறையினர், அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள நிலையில்,விரைவில் அந்த இளைஞர் பிடிபடுவார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.