ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஒமைக்ரான் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதோடு பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரை புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானின் மொத்த பாதிப்புகள் 450 ஐ தாண்டியுள்ள நிலையில், பண்டிகை காலத்தில் கூட்டம்கூடி ஒமிக்ரான் பரவுவதை தடுக்க உள்ளூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.