வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு பாம்புகளால் படையெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம்(salem) வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் அகற்றப்படாததால், அப்பகுதியில் பாம்புகள் புகுந்துள்ளன.
கடந்த திங்கள்கிழமை பள்ளிக்குள் கருஞ்சாரை பாம்பு ஒன்று பிடிபட்டது. இன்று செவ்வாய்க்கிழமை, 4 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று பள்ளிக்குள் சுற்றியது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்து சென்ற வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், அந்த பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து பாம்புகளை கண்டதால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களிடையே ஆச்சியை ஏற்படுத்தி உள்ளது.