அதிமுக ஆட்சியில் டெங்குகாய்சல் காரணமாக இரண்டு முறை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது,
இதில் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்,
பின்னர் கற்பினி பெண்கள், முதியோர் உள்ளிட்டோர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினார்கள்,
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:-
சென்னை பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியில் 34 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. அதனால் இங்கு 20 துறை மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது,
இந்த ஆண்டு 1250 முகாம் நடத்த திட்டமிட்டு அதில் 631 முகாம் நடைபெற்றுள்ளது. மேலும் முழு அளவில் முகாம் குறிபிட்ட காலத்தில் நடைபெறும் என்றார்.
டெங்கு காய்சல் பாதிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:-
கடந்த பத்தாண்டுகளில் இந்த ஆண்டு டெங்கு காய்சல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 2012ஆம் ஆண்டு 66 உயிர்ரிழப்புகளும், 2017 ம் ஆண்டு 65 உயிர்ழப்புகளும் டெங்குகாய்சலால் ஏற்பட்டது. ஆனால் தற்போது மிகவும் கட்டுபடுத்தப்பட்டதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.